Hrithik Roshan all set for 'Vikram Vedha' remake
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக இருந்தது. பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு தணிந்ததும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் நடிகர் ஹிருத்திக் ரோஷன், கொரோனா பரவல் குறைந்ததும் பைட்டர், கிரிஷ் 4 மற்றும் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதனால் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால், அவர் இப்படத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…