High Court stays release of Kerala Story 2
கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை
‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இப்படத்தை பிப்ரவரி 27-ந்தேதி வெளியிட முடியாது என்று உத்தரவிட்டார்.
மேலும், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அது ‘விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை’ என்றும் கூறியது. இதற்கிடையில், படத்தின் வெளியீட்டைத் தடை செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் இன்றே மேல் முறையீடு செய்யவுள்ளனர். நாளை (பிப்ரவரி 27-ந்தேதி) படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு இதனை மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தவுள்ளது.
காமாக்யா நாராயண் சிங் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சில பெண்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…