பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த ‘பேச்சுலர்’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். அதாவது, ஒரு வயது சிறுவனின் மூளைக்கு அருகே கட்டி ஒன்று இருந்ததாகவும் அதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக சமூக வலைதளம் மூலம் சம்பந்தபட்ட நபர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் உதவி கேட்டார். இதை பார்த்த ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ரூ.75,000 பணம் அனுப்பி உள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன் ஸாட்டை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ் ‘என்னால் முடிந்த சிறு உதவி ‘என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…