அரண்மனை படத்தின் 4-ம் பாகம் தயாராகிறது

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன.

சூர்யாவின் சிங்கம், லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் 3 பாகங்கள் வெளியானது. அரண்மனை பேய் படத்தின் 2 பாகங்கள் ஏற்கனவே வந்து நல்ல வசூல் பார்த்த நிலையில் தற்போது அரண்மனை மூன்றாம் பாகமும் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் ஆர்யா, ராஷிகன்னா உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். சுந்தர்.சி இயக்கி உள்ளார். குஷ்பு தயாரித்துள்ளார்.

இதையடுத்து அரண்மனை 4-ம் பாகத்தையும் எடுக்க சுந்தர்.சி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்துள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

23 hours ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

23 hours ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

23 hours ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

23 hours ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

24 hours ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

24 hours ago