திருமலை வெங்கடேஸ்வர கோவிலில் மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளை அவமதித்துப் பேசினார் என மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து நடிகர் சிவகுமார் மீது ஆந்திரப் பிரதேச காவற்துறை வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளது.
நடிகர் சிவகுமார் மீது அவதூறு வழக்கு – திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் குறித்து பொய்ப்பிரச்சாரம் செய்கிறாராம்
நடிகர் சிவகுமார் சில காலத்துக்கு முன்னர் பேசிய பேச்சொன்றைக் காரணம் காட்டி தமிழ் மாயன் என்னும் பெயரில், திருப்பதி வெங்கடேஸ்வர கோவிலின் பக்தர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 29, 2020 அன்று இவ்வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இப் பேச்சில் நடிகர் சிவகுமார் நான்கு நாட்கள் பாம்பு போல் வளைந்து போகும் வரிசையில் நின்று ஒருவரை, வரிசையில் நிற்காமலேயே கடவுளைத் தரிசிக்க வல்ல ஒரு பணக்காரருடன் ஒப்பிட்டு கதையொன்றைக் கூறியிருந்தார் என அறியப்படுகிறது. இப் பேச்சின் காணொளி ஒன்று கடந்த சனியன்று சமூகவலைத் தளங்களில் பிரசுரமாகியிருந்தது.
இந்துக் கோவில்களில் சிற்பிகளை நடத்தும் முறை மற்றும் சில சாதியினரைக் கோவிலினுள் அனுமதிக்காமை போன்ற சடங்குகளை சிவகுமார் கடுமையாக விமர்சித்துக் கூட்டமொன்றில் பேசியிருந்தார்.
“1006 ஆம் ஆண்டிலிருந்து 1010 வரை தஞ்சாவூர் கோவிலைக் கட்டுவதற்கு 1000 த்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் பணிபுரிந்தார்கள். ஒரு சிற்பி ஆறு வருடங்களாகக் கல்லின் மேல் ஏறியிருந்து அதைப் பொழிந்து சிவலிங்கமாக்குகிறார். அச் சிவலிங்கம் கர்ப்பக்கிரகத்துள் வைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்படும்போது அதை வழிபட அச் சிற்பி உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இது பொய்யென்று நினைக்காதீர்கள். அச் சிற்பியின் 12 வது சந்ததியினரில் ஒருவர், தான் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் எனினும், தன்னை இப்போதும் உள்ளே அனுமதிப்பதில்லை என என்னிடம் கூறினார். ” என சிவகுமார் அப்பேச்சில் கூறுகிறார்.
இது உண்மையல்ல எனவும், நடிகர் சிவகுமார் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…