fans-trolls-on-raja rani and bharathi kannamma serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் அதே சமயம் அதற்கு எதிர்மறையான கருத்துக்களும் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றன.
பாக்கியலட்சுமி சீரியலில் மனைவிக்கு துரோகம் செய்யும் கோபி தொடர்ந்து தப்பித்து வந்த நிலையில் தற்போது விஷயம் அறிந்து பாக்யா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். ஆனாலும் கோபி திருந்தாமல் ராதிகா பின்னாடி சுத்துவது போன்ற காட்சிகள் ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. கோபி போன்ற கதாபாத்திரங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக இருக்கும். சீரியலை நல்ல வழியில் கொண்டு போங்க இல்லையென்றால் எண்டு கார்டு போடுங்க என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல்கள் லாஜிக் இல்லாமல் பயணித்து வருவதாக கூறுகின்றனர். மெகா சங்கமம் எபிசோடில் சம்பந்தமே இல்லாமல் சாமியார் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வந்து கதையை நகர்த்தி வருவதாக கூறுகின்றனர்.
பாரதி தொடர்ந்து கண்ணம்மாவை ஏற்க மறுத்து வருவது தொடர்கதை ஆகிவிட்டது. அதேபோல் சந்தியா ஏதாவது செய்ய அதை சிவகாமி தவறாக புரிந்து கொள்வது சந்தியாவை திட்டி தீர்ப்பதே தொடர்கதையாக ஒளிபரப்பாகி வருவது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை உண்டாக்கி உள்ளது.
விறுவிறுப்பான கதைகளத்தோடு சீரியலை கொண்டு செல்ல முயற்சி செய்தால் நிச்சயம் இந்த சீரியல்கள் மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…