fans-the-sidhu-shreya-couple-in-famous vijay tv show
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சி தான் “மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை”. இந்த நிகழ்ச்சியை சீசன் 1, 2 மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து சீசன் 3 எடுக்கப்பட்டது அப்போது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி அதிகரித்தது மட்டுமின்றி மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்று வந்தது. கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருவரும் நடுவர்களாக கலந்து கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியை மா.கா. பா. ஆனந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தம்பதிகளுக்கான நிகழ்ச்சி என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். தற்போது இந்நிகழ்ச்சிக்கான சீசன் 4 தொடங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாக “சித்து, ஸ்ரேயா” தம்பதியினர் கலந்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினர் கலர்ஸ் டிவியில் ‘திருமணம்’ என்னும் சீரியலில் மூலம் பிரபலமானவர்கள்.
இதனை தொடர்ந்து இருவரும் நீண்ட நாள் காதலித்து நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தனர். இதில் சித்து என்பவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியல் ஆன “ராஜா ராணி சீசன் 2″என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தம்பதியருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு என்றே சொல்லலாம். அதனால் இவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் நிஜமாகவே கலந்து கொள்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…