Fans admire Radhika's action
சின்னத்திரை, வெள்ளித்திரை என தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ராதிகா ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. இவர் ரடான் மீடியாவில் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். சமீபத்தில் ஐக்கிய இங்கிலாந்து தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (23.04.2022) ராதிகா சரத்குமார் இங்கிலாந்து தமிழ்துறை குழுவினருடன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடைக்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினருக்கு ராதிகா வழங்கினார்.
1996, மே 13இல் தமிழக அரசால் பரிசாக வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, இலண்டன் பல்கலைக்கழகம் எஸ்.ஓ.ஏ.எஸ்-இல் கல்வி கற்க வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக, இந்திய உயர் ஆணையாளர் முன்னிலையில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…