Famous actress changed her role to Nayanthara
நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னட ரீமேக் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்தியில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார். நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலகப் பயணம் குறித்து உறவினரும் நடிகையுமான மகேஸ்வரியுடன் ஜான்வி கபூர் மனம்…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. தீபாவளியை முன்னிட்டு…
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று முந்தைய இரண்டு பாகங்களும் வெற்றியடைந்த ‘பொலிமேரா’ திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகமாக ‘பொலிமேரா 3’ உருவாகி…
Appakutty Official Trailer | Vijay Antony | Preethi Asrani | Mu. Maran
FA FA FA Lyrical Video | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar