ennai-kolla-vantha-lyrics-video-from-pistha movie
தமிழ் சினிமாவில் வெளியான மெட்ரோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பிஸ்தா. இந்த படத்தில் மிர்துளா முரளி நாயகியாக நடிக்க அருந்ததி நாயர், சதீஷ், பிரபல காமெடி நடிகர் செந்தில், யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.
எம் ரமேஷ் பாரதி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஒன் மேன் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் தயாரிக்கிறார். எம் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் தரண் குமார் படத்திற்கு இசையமைக்க இயக்குனர் ரமேஷ் பாரதி, யுக பாரதி, ஆர் ஜே விஜய் பாடல் வரிகளையும் எழுதி உள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்போது என்னை கொல்ல வந்த என்ற இரண்டாவது சிங்கிள் ட்ராக் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் அக்டோபர் ஏழாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…