கடந்த சில நாட்களாக போதை பொருள் குற்ற சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை முற்றிலும் தடுக்க கர்நாடக அரசு போராடி வருகிறது.
இந்நிலையில் போதை பொருள் பயன்படுத்துவதாக நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் போலிசார் ராகினி, சஞ்சனா இருவரையும் பெங்களூரு மடிவாளா மகளிர் காப்பகத்தில் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
சிறுநீரின் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க இயலும் என்பதால் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட இருந்தது. ஆனால் நடிகை சஞ்சனா பரிசோதனைக்கு உட்பட மறுத்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை காட்டிய பின் அவர் பரிசோதனை செய்ய ஒத்துக்கொண்டார். அதே வேளையில் ராகினி திவேதி தன் சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின் வேறு மாதிரியும் எடுக்கப்பட்டது.
இதனால் ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என விசாரணை அதிகாரி குறிப்பிட்டதால் போலிஸ் காவல் இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…