drishyam film actor plays the villain for Simbu movie
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்கிறார்.
ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகர் சித்திக், சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரிஷ்யம், ஹே ஜூடு, ஒடியன் போன்ற மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…