‘Drishyam’ alliance seeking OTT again
மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து இவர்கள் கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி உள்ள படம் ‘டுவெல்த் மேன்’. இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆண்டனி பெரம்பாவூர், இப்படத்தையும் தயாரித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ‘டுவெல்த் மேன்’ படத்தின் படப்பிடிப்பை, 40 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘திரிஷ்யம் 2’ படத்தைப் போல இப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…