don movie release update
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், இவர் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
டான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘டான்’ படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் கொரோனா பரவல், திரையரங்குளில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது பிப்ரவரி வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தரப்பிலிருந்து வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்குமுன் வலிமை, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் பொங்கல் ரிலீஸிலிருந்து பின்வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…