நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டான்’. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
மேலும் இப்படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
டான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் நடத்தி முடித்த படக்குழு, தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பதால், இதற்காக உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். அடுத்த மாதத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.
இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, படத்தை வருகிற டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…