Categories: NewsTamil News

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்!

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவுபெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) கதாநாயகனாக நடித்துள்ளார்.

பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது….இந்த விழாவிற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படமும் இதுவே…

சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சந்தர்ப்பம் சூழலால் சில தவறுகளுக்கும் புதைக்கப்பட்ட மனநிலை கொண்ட ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளராக தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன் என்கிறார்கள் விழாத் தேர்வுக்குழுவினர்.

செல்லும் விழாக்களில் எல்லாம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது ’பக்ஷிகளுக்கு பறயான் உளது.’

அநேக திரைப்பட விழாக்களில் இதுவரை திரையிடப்பட்ட இப்படம் பஹாமாஸில் அதிலும் பெண்கள் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

இந்த திரைப்படத்தில் அமர் ராமச்சந்திரன், மீனாக்ஷி, நீலாஞ்சனா, லைலா, நமிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

டாக்டர் அமர் இராமச்சந்திரன் ஏற்கெனவே நடித்து தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் தாய்நிலம் இந்த வருடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்க தயாராகி வருகிறது.

ஒரே வருடம் இரண்டு திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன்.

admin

Recent Posts

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

12 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

12 hours ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

12 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

13 hours ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

1 day ago