director venkat-prabhu-release-the-sunaina-movie-poster
காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சுனைனா. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இவர் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமான “ஜெரினா” என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை மலையாள இயக்குனரான டோமின் டி.சில்வா இயக்கியுள்ளார்.
எல்லோ பியர் புரோடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு பிவி. கே. பவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சதீஷ் நாயர் இசையமைத்திருக்கும் இந்தப்படம் தமிழ், மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான ‘பர்ஸ்ட் லுக் போஸ்டரை’ வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் “ஜெரினா” படத்தை குறித்து பேட்டியில் பேசிய சுனைனா தான் இந்தப் படத்தில் சாதாரண ஹவுஸ் வைஃப் ஆக ஜெரினா கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இதில் ஜெரினா கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை என்று கூறியுள்ளார். மேலும் டைரக்டர் டோமின் டி.சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார்.
அவர் என்னிடம் இந்த கதையை சொல்லும்போதே இந்தப்படத்தைப் பார்க்க எனக்கே ஆர்வத்தை தூண்டியது. டைரக்டரின் முந்தைய ஹிட் படங்களான”பைபிள் சுவத்திலே பிராணயம்”, “ஸ்டார்”போன்ற படங்களை விட இந்த “ஜெரினா” படத்தின் கதை மிகவும் ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் முக்கியமான படமாக “ஜெரினா” இருக்கும் என்று அந்தப்பேட்டியில் பேசியுள்ளார்.
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…