இயக்குனர் டி.பி.கஜேந்திரனின் மகள் கடையில் கொள்ளை

பிரபல தமிழ் சினிமா பட டைரக்டர் டி.பி.கஜேந்திரன். இவரது மகள் முத்துலட்சுமி. இவர் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் “சூப்பர் மார்க்கெட்” கடை நடத்தி வருகிறார். காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ், பூஸ்ட், விலை உயர்ந்த சாக்லேட், பிஸ்கட் பாக்கெட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், ரூ.15ஆயிரம் ரொக்கம், கேமரா டி.வி.ஆர் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை காண பொறுத்தப்பட்டு இருந்த பெரிய எல்.இ.டி டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளை கும்பல் மூட்டை கட்டி அள்ளி சென்றது தெரியவந்தது.

அதே பகுதி அபுசாலி சாலையில் அடுத்தடுத்து உள்ள அரிசி மண்டி, மெடிக்கல் கடையையும் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அரிசி கடை கல்லாப்பெட்டியில் பணம் ஏதும் இல்லாததால் ஆத்திரத்தில் அங்கிருந்த அரிசி மூட்டைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு நாசமாக்கினர். மெடிக்கல் கடை கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.700 ரொக்கத்தையும் சுருட்டி சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் முககவசம் மற்றும் குல்லா அணிந்து வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க வடபழனி உதவி கமி‌ஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் சேவியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

7 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

7 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

7 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago