director sudha kongura has met superstar rajinikanth
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி பெண் இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்குரா. இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பல விருதுகளையும் குவித்து இருந்தது. அந்த வகையில் தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினி அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த சுதா கொங்குரா கே ஜி எஃப் படம் நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கம் இருக்கும் படத்தில் நடிக்க ரஜினியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நடிகர் ரஜினி ஞானவேல் இயக்கத்தில் நடித்த பிறகு சுதா கொங்குரா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…