Director shankar-confused-by-kajal-agarwal-reply
பிரபல தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து நிறைய படங்களை நடித்த இவர் மாவீரன் என்ற தெலுங்கு டப்பிங் படத்தின் மூலம் தான் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களான விஜய்,அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்து வந்தார்.
காஜல் அகர்வாலின் உறுதியான பதில் – குழப்பத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்.
அதன்பின் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்த காஜல் அகர்வால் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் பிச்சனூர் கிட்ச்லு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் போது தெலுங்கு படமான “ஆச்சாரியா” திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து நடிக்க முடியாத காரணத்தால் பாதியிலேயே விலகி விட்டார். அதன் பின் மீண்டும் சங்கர் இயக்கத்தில் உருவாக இருந்த நடிகர் கமல்ஹாசனின் “இந்தியன் 2” படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சில பல காரணங்களால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது.
அதனால் காஜல் அகர்வால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கும் ஷங்கர் காஜல் அகர்வாலிடம் இது குறித்து பேசியுள்ளார். அதற்கு காஜல் அகர்வால் நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்னால் நடிக்க முடியாது, குழந்தையை பார்த்துக் கொள்ள நேரம் செலவிட வேண்டும் என்று மறுத்துவிட்டார். இதனால் இயக்குனர் சங்கர் மற்றும் பட குழுவினர் குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…