தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்தடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், தளபதி 65 போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரும், இசையமைப்பாளர் அனிருத்தும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy
Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer
Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…