நடிகர் விஜயை வாழ்த்தி சீனு ராமசாமி போட்ட பதிவு வைரல்

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் இவர் தற்போது லியோ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூலம் அரசியலில் களம் இறங்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்றார் போல் விஜய்யும் அரசியல் சார்ந்த பல நல்ல விஷயங்களை மக்களுக்கு தனது இயக்கம் மூலம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய முன் தினம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 6000 மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி ஊக்குவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பலவிதமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் சீனு ராமசாமி அவர்கள் விஜயை பாராட்டி வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், கல்விக்கு ஊக்க கண் திறக்கும் ‘நண்பா’. இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்தும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவிற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

அத்திக்காயில் இருக்கும் நன்மைகள்.!!

அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

4 hours ago

பைசன்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

11 hours ago

டியூட்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

12 hours ago

சண்டை போட்ட சீதா, விட்டுக்கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…

13 hours ago

சூர்யாவை திருத்த நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

13 hours ago

டாஸ்கில் கோபப்பட்ட ஆதிரை, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

14 hours ago