மணிரத்னம் மீது இயக்குனர் பொன்ராம் அதிருப்தி

ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் கூட்டுப்படங்கள் தயாரிக்கும் முறை இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமீபகாலத்தில் இப்படியான படங்களின் வருகையை ஓ.டி.டி. தளங்கள் வரவேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம், ஜெயேந்திர இருவரும் இணைந்து நவரசா என்ற பெயரில் ஒன்பது சுவைகளைப் படமாக்கினர்.

ஒவ்வொரு இயக்குனரும் ஒரு படத்தை இயக்கியிருந்தனர். அதில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய ஒரு படம் இருந்தது. அதை மணிரத்னம் விலக்கியிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. இதை இயக்குனர் பொன்ராம் ரசிகர்களுடன் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது பற்றி பொன்ராம் கூறும்போது, “நவரசா ஆந்தாலஜியில் என் படம் வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும். படத்தின் ஒலியில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார்.

ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை. எங்கள் படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்கதையில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார்.

Suresh

Recent Posts

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

2 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

3 hours ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

3 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

4 hours ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

1 day ago