Director Pa Ranjith Latest Movie Update
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் பா. ரஞ்சித். இவர் இயக்கிய கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் இவர் இயக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பா. ரஞ்சித் அவர்கள் கோலிவுட் ஸ்டாரான விக்ரம் அவர்களின் 61வது படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘மைதானம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு மைதானம் என்ற பெயர் வைத்ததால் இப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப்போல் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருக்குமோ என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படத்தை 3டியில் உருவாக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் அடுத்த அடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டு வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…