director mysskin shared leo movie update
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்த இயக்குனர் மிஷ்கின் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்ததாக படகுழுவுக்கு நன்றி தெரிவித்து சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மிஷ்கின், கலைப்புலி எஸ் தானு அவர்களின் தயாரிப்பில் தான் அடுத்த படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து லியோ திரைப்படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார்.
அதில் அவர், லியோ திரைப்படம் அருமையாக வந்துள்ளது என்றும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் விஜய்-லோகேஷ் சேர்ந்தாலே பக்கா ஆக்சன் படமாக தான் இருக்கும் என்றும் நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் விஜய் உடன் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் இன்றும் அதே அன்புடன் இருக்கிறார் எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…