director mari selvaraj talk about dhanush 56
தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் கதை குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் மாறி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
தனுஷ் 56 திரைப்படம் ஒரு காலகட்ட படம் என் வாழ்க்கையில் முதல்முறையாக இந்த படத்தில் அரசியல் உடன் கற்பனையையும் முயற்சிக்கிறேன் இந்த பிரிவினையின் தொடக்கத்தைப் பற்றி இது பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்
இது மட்டுமில்லாமல் கர்ணன், பரியேறும் பெருமாள், மாமன்னன், வாழை, பைசன் போன்ற படங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு ஒரு தொடக்கப் புள்ளி இருக்கும் அந்த வேறு யாராவது கண்டுபிடித்து அதன் ஆரம்பத்திலேயே அதை அகற்ற முயற்சித்தால் என்ன செய்வது என்பதை பற்றி தான் கதை என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் தனுஷ் சார் இது எங்கள் இருவரின் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் நிச்சயமாக என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…