director maari selvaraj about dhanush movie update
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி கணக்கென தனி இடம் பிடித்து பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் மாரி செல்வராஜ். பரியேறு பெருமாள் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் அடுத்தபடியாக தனுஷ் உடன் இணைந்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இதனை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் தனுசுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது. இதனால் இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
அதில் அவர், இப்படம் வரலாற்று படமாக உருவாக உள்ளது. படத்தின் கதையை உறுதிப்படுத்தி விட்டோம். இந்த கதை எல்லா காலகட்டத்தையும் ஒன்றிணைக்கக் கூடியதாக இருக்கும் என்று சுவாரசியமான தகவல்களை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…