Director Bala Divorce Details
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படங்களை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதேபோல்தான் பாலாவும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பாலா. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
பாலா எப்போதும் அமைதியாகவே இருப்பாராம். என்னேரமும் படத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே அவருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிதாக பேச மாட்டாராம். முதலில் வாழ்வைப் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டப்பட்ட அவரது மனைவி போகப்போக அவரைப் புரிந்து கொண்டு அவருக்கு ஏற்ற மனைவியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
இருந்தாலும் பாலா மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிதாக பேசிக்கொள்ளாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் விவாகரத்து வாங்கி சட்ட ரீதியாக பிரிந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதினேழு வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தம்பதி பிரிந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…