dhruvanatchathiram-movie-update viral
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துருவ நட்சத்திரம் இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.
துருவ நட்சத்திரம் இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…