தாதாவாக மாறிய துருவ் விக்ரம்

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘சியான் 60’ என்று அழைத்து வந்த இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

தற்போது துருவ் விக்ரம் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அதற்கான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தாதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் துருவ் விக்ரமின் போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Suresh

Recent Posts

Vaane Vaane Lyrical Video

Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…

12 hours ago

Kalangathey Lyrical Video

Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash

12 hours ago

She is My Chellakutty Lyric Video

She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…

12 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – குவிந்துள்ள கலக்கல் கலெக்‌ஷன்கள்!

விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…

12 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் ஷாப்பிங் – குறைந்த விலையில் குவிந்துள்ள அசத்தல் கலெக்‌ஷன்கள்!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…

12 hours ago

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…

13 hours ago