Dhanush to team up with 'Comali' director
துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் பெயரிடப்படாத படம், பாலிவுட்டில் அத்ரங்கி ரே ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இப்படங்களை தொடர்ந்து கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் தனுஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வரும் தனுஷ், காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதன் காரணமாகவே பிரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கோமாளி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…