தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நன்றி உதயநிதி ஸ்டாலின். நீங்கள் விரும்பும் கலையை பாராட்ட தவறுவதில்லை. “கர்ணன்” படத்திற்காக நீங்கள் பாராட்டிய காலத்தை நான் இன்னும் அன்புடன் நினைவில் கொள்கிறேன். இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…