dhanush-captain-miller-new-getup-photo
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. இதில் இடம்பெறும் தனுஷின் கதாபாத்திரத்தின் தோற்றமும் மிக வித்தியாசமாக இருக்கும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தனுஷ் நிறைய தாடியை வளர்த்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அதற்கான புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அப்புகைப்படத்தில் தனுஷ் பார்க்க தலை நிறைய முடி மற்றும் முகத்தில் நீண்ட தாடியுடன் இருக்கிறார். அவரது இந்த நியூ லுக் மாஸ் புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…