dhanush and simbu movie release update
தமிழ் சினிமாவில் அஜித் விஜய், ரஜினி கமல் போன்று அடுத்து போட்டிக்குரிய பிரபலங்கள் என்றால் அது சிம்பு மற்றும் தனுஷ் என்று கூறலாம். இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்களை போல எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர்.
தொடர்ந்து இவர்களுக்கிடையே சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான நிலையில் தனுஷ் மற்றும் சிம்புவின் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆமாம் தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் உருவாகியிருக்க சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் தான் ஒரே தினத்தில் மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த இரண்டு படங்களும் ஆகஸ்டு 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஒருவேளை இரண்டு படங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டால் ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…