தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.
தேவர்மகன் 2-ம் பாகத்தை தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோரும் இப்படத்தில் கமலுடன் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய கமல், தேவர்மகன் படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: தேவர் மகன் படத்தின் இயக்குனர் பரதன், ஒரே வாரத்தில் படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவதாக கூறியதால், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 7 நாட்களில் தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததாக கமல் கூறினார்.
மேலும் இப்போது என்னிடம் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்தாலும் ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் தன்னால் முடியாது என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…