dd next level movie 3 days collection update
சந்தானம் நடிப்பில் திகில் நகைச்சுவை பாணியில் அடுத்ததாக வெளியான திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் முந்தைய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கீத்திகா டிவாரி நாயகியாக நடித்திருந்தார்.
வெளியான மூன்று நாட்களில், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் உலக அளவில் வெறும் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. திரையுலக வட்டாரங்களின்படி, இது சந்தானத்தின் முந்தைய படங்களின் வசூலை ஒப்பிடும்போது மிகவும் குறைவானது.
இதனால், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பின்னடைவை சந்தித்துள்ளதாக கருதப்படுகிறது.
சந்தானம் தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களில் நடித்து வந்தாலும், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…