dd-divyadharshini-second-marriage
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தன்னுடைய பள்ளி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இதனையடுத்து கடந்த சில வருடங்களாகவே திவ்யதர்ஷினி சிங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் உடன் நெருங்கி பழகி வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என சொல்லப்படுகிறது.
இது குறித்த தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் டிடி இந்த விஷயம் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். அவரது இரண்டாவது திருமணம் குறித்த தகவல் உண்மையா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் உறுதியாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…