ஒரே கல்லூரியில் படித்து வரும் கவின் மற்று அபர்ணா காதலித்து வருகின்றனர். பின்னர் அந்த காதல் எல்லை மீற அபர்ணா கர்ப்பமாகிறார். இவர்களை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். பின்னர் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் இருவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு நாள் இருவரின் சண்டை முற்றிப்போக கர்ப்பிணி மனைவியை வீட்டில் விட்டு கவின் கிளம்பி விடுகிறார்.

அப்போது அபர்ணாவுக்கு பிரசவ வலி வர கவினை தொலைப்பேசியில் அழைக்கிறார். அவரின் அழைப்பை எடுக்காமல் கவின் தவிர்க்கிறார். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறக்கிறது. பின்னர் நடந்த விஷயத்தை அறிந்துக் கொண்ட கவின், அபர்ணாவை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு குழந்தையை விட்டுவிட்டு அபர்ணா பெற்றோருடன் சென்றுவிடுகிறார். இறுதியில் கவின் தனது குழந்தையை வளர்த்தாரா? பிரிந்த மனைவியுடன் கவின் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தின் நாயகன் கவின், கல்லூரி மாணவர், கணவர், தந்தை என நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

நடிப்பின் மூலம் அந்த உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தி கைத்தட்டல் பெறுகிறார். நாயகி அபர்ணா, எதார்த்த நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய காதலியின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் அழவைக்கிறார். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா, வி.டி.வி.கணேஷ், ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

சாதாரண கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தி படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு. திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தை ரசிக்க உதவியுள்ளது. காதல் ஜோடியின் நெருக்கம், குடும்பம், மோதல், பிரிவு என பல உணர்வுகளை கோர்வையாக கொடுத்து அசத்தியுள்ளார். பெற்ற குழந்தையை விட்டு விட்டு தாய் பெற்றோருடன் சென்றுவிடுவது லாஜிக்கல் பிரச்சனை தோன்றுகிறது இறுதியில் இதற்கான காரணத்தை வைத்து நியாயப்படுத்தியுள்ளார் இயக்குனர். சாதரண வாழ்க்கையை அழகாக கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு. பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. மொத்தத்தில் டாடா – சிறந்த அப்பா.


dada movie review
jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

11 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

12 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

19 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

19 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

20 hours ago