கஸ்டடி படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு வெளியிட்ட வெங்கட் பிரபு.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். கஸ்டடி ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கஸ்டடி இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வருகிற 16-ஆம் தேதி மாலை 4.51 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

4 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

4 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

4 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

4 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

4 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

22 hours ago