விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். பொங்கலை ஒட்டி ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் என நடிகர் விஜய் நடித்த ஏழு படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள மாஸ்டர் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் நேரில் வந்து பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்கிற்கு கூட்டமாக வருகின்றனர்.

விமர்சனம் என்பது பாசிட்டிவாகத் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை, நெகட்டிவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய ஹீரோவைக் காட்ட வேண்டும் என்பதாலேயே மாஸ்டர் படம் நீளமாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

வன்மத்தோடு பேசிய ராஜாங்கம் சவால் விட்ட சூர்யா, மகேஷ் மூன்று முடிச்சு சிங்க பெண்ணே எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago

சினிமாவுக்கு என் மகன் கண்டிப்பாக வருவான் சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற…

11 hours ago

கருப்பு படத்தின் முதல் ரிவ்யூவை பகிர்ந்த சாய் அபயங்கர்.. வெளியான பதிவு.!!

கருப்பு படத்தை பார்த்துவிட்டு சாய் அபயங்கர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

19 hours ago

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு வையாபுரி கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு காமெடி நடிகர் வையாபுரி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

19 hours ago

இது என்னோட ப்ராமிஸ்.. தலைவர் 173 படம் குறித்து பேசிய சிபிச் சக்கரவர்த்தி..!

தலைவர் 173 படம் குறித்த சிந்தி சக்கரவர்த்தி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

19 hours ago

நல்ல மனைவி வேண்டும்.. திருவொற்றியூர் கோவிலில் நடிப்பு அரக்கன் சுவாமி தரிசனம்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில்…

2 days ago