Criticism of body composition ... Ileana
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது.
எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை. கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது உடலில் இன்னும் அழகான பகுதிகள் நிறைய உள்ளது. அதற்காக என்னை பாராட்டினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…