ஐகோர்ட்டின் உத்தரவை அலட்சியப்படுத்திய விஷால். வார்னிங் கொடுத்த ஐகோர்ட்

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இருநீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, அவரது சொத்துக் கணக்கு, வங்கி கணக்கு விவரங்களை 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், கடந்த 19-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஷாலை நேரில் ஆஜராக மீண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகினார். அவர் தரப்பில் இளம் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ”19-ந்தேதி சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்ய உத்தர விட்டும், தாக்கல் செய்யவில்லை. வக்கீல்களும் ஆஜராகவில்லை. இந்த ஐகோர்ட்டின் உத்தரவை விஷால் வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறார். இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை அனைவரும் சமம்தான். பெரியவர், சின்னவர் என்ற பாகுபாடு கிடையாது. அதனால், விஷால் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பேன்” என்று எச்ரிக்கை செய்தார்.

அதற்கு வக்கீல், நேற்று அனைத்து விவரங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என் றார். உடனே நீதிபதி, அதற்கான ஆதாரம் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

Court warning to actor Vishal
jothika lakshu

Recent Posts

கருப்பு : ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

7 hours ago

நெகட்டிவ் விமர்சனங்களால் வருத்தப்பட்டுள்ளேன்.. நடிகை ஸ்ரீலீலா வேதனை..!

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…

7 hours ago

மூக்குத்தி அம்மன் 2 முற்றிலும் வேறுபட்ட படம்.. ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்.!!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…

8 hours ago

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 day ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

1 day ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

2 days ago