இருமல், காய்ச்சல் போல் கண்கள் சிவப்பதும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆல்பா்டோ மாகாணத்திலுள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டு சிவந்த நிலையில் 29 வயது பெண் கடந்த மாா்ச் மாதம் வந்தாா். அவருக்கு பல நாள்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, கொரோனோ பாதிப்புக்குள்ளான ஆசிய நாட்டிலிருந்து வந்திருந்த அந்தப் பெண்ணுக்கு, அந்த நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டும் அந்தப் பெண்ணுக்கு இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
ஆனால் அதற்குப் பதிலாக அந்தத் வைரஸ் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 10 முதல் 15 சதவீதத்தினருக்கு, இரண்டாம் நிலை அறிகுறியாக கண் எரிச்சல் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால், இருமல், காய்ச்சல் இல்லாமலேயே அந்தப் பெண்ணுக்கு கொரோனா அறிகுறியாக கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே, எரிச்சலில் கண்கள் சிவப்பதும் கொரோனா நோய்க்கான அறிகுறியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கருதுகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…