Corona to actress Magnaraj baby
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரின் திடீர் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை மேக்னாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோரும், நானும் எனது குழந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுடன் கடந்த வாரத்தில் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதை தெரிவிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மேக்னாராஜ் தனது பதிவில் கூறியிருப்பதாவது,’எனது ரசிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த ரசிகர்கள் மேக்னாராஜின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…