cook with comali manimegalai about pregnancy
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் மணிமேகலை. இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் அறிமுகமான இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது மட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று வந்தார்.
சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார். இவரது இந்த வெளியேற்றத்திற்கு காரணம் கர்ப்பம் தான் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் தற்போது மணிமேகலை இதுகுறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது அப்போது ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேட்டதற்கு இல்லை என பதில் அளித்துள்ளார்.
மேலும் கர்ப்பம் என பரவிய தகவல் அனைத்தும் வதந்திகளே என தெரிவித்துள்ளார். எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதை நானே அறிவிப்பேன். நான்கு youtube சேனல்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளும்படி இருக்காது என கூறியுள்ளார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1