cook with comali actor sakthi met with an accident
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த மூன்று சீசன் வரை கோமாளிகளில் ஒருவராக அதிகமாக பங்கேற்று வந்தவர் சக்தி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகளுக்கும் போட்டியாளர்களுக்கு இணையாக திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சக்தியும் வெள்ளித்திரையில் பிஸியாகி கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் புதிய கார் ஒன்றை வாங்கினார்.
இந்த நிலையில் தற்போது தனது கார் விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு பேருந்து காரின் அருகே வந்து உரசி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் தனக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் காருக்கு தான் பலத்த சேதம் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பலரும் சக்திக்கு ஆறுதல் கூறி நலம் விசாரித்து வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…