cobra-movie-new-postor-release update
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர்தான் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான ஐ, கடாரம் கொண்டான் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம் தான் “கோப்ரா”. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரில்லான படங்களை எடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேஎஸ். ரவிக்குமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் இணைந்துள்ளனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ. ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் திரையரங்கில் வெளியாக போவதாக படகுகுழுவினர் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கான புதிதாக சிறப்பு போஸ்டர் ஒன்றை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்போடு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘கோப்ரா’ படத்தை யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் அந்த படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…