Cinema theatres to reopen from August 23
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானதால் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் 23.08.2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…