தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’!

தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’!

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.

ஜனவரி 12-ந்தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று
வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது.

வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 5-ம் நாளில் மட்டுமே ரூ.36 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிரஞ்சீவி நடித்து இதற்கு முன் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், இப்படத்தின் வெற்றி அவருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

இதற்கிடையே ஜனவரி 9-ந்தேதி வெளியான பிரபாஸின் ‘த ராஜா சாப்’ திரைப்படம் ரூ.238 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த படம் தமிழில் டப்பிங் அல்லது ரீமேக் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chiranjeevi and Nayanthara starrer ‘Mana Shankara Vara Prasad Karu’ is a blockbuster in Telugu!
dinesh kumar

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

5 hours ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

5 hours ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

6 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 day ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago