Chife Minister mk stalin viral post about iravin nizhal movie
ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இந்த இரவின் நிழல் படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் இயக்குனர் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதேபோல் தற்போது இப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்த்திபனை பாராட்டி “இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம்!” என்று பாராட்டி, பார்த்திபனையும் படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார்.
மேலும் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “எதிலும் தனிப்பாணி – அதுதான் பார்த்திபன்! #OthaSeruppu-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! #IravinNizhal படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார். நெகிழ்ச்சியான பதிவுடன் இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிலும் தனிப்பாணி – அதுதான் @RPARTHIEPAN!#OTHASERUPPU-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!#IRAVINNIZHAL படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!
NONLINEAR SINGLE SHOT படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…